ECONOMY

சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

8 டிசம்பர் 2022, 10:31 AM
சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் மாலை  வரை  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலம், டிச 8: சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் முழுவதும் மாலை  வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

கெடா, பேராக், பகாங், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகள்

உட்பட பெர்லிஸ், ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய

மாநிலங்களிலும் இதே வானிலைதான் இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை

(மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

அதன் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர்

(மிமீ/மணி) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. மழை ஒரு

மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கையாகும்.

உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my மற்றும் myCuaca

இணையப் பக்கங்களை நாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.