ALAM SEKITAR & CUACA

ஆண்டுக்கு 8 முறை மட்டுமே சிறப்பு லாட்டரி குலுக்கலை நடத்த அனுமதி

5 டிசம்பர் 2022, 10:47 AM
ஆண்டுக்கு 8 முறை மட்டுமே சிறப்பு லாட்டரி குலுக்கலை நடத்த அனுமதி

புத்ராஜெயா, டிச 5- அடுத்தாண்டு ஜனவரி முதல் 4டி எனப்படும் சிறப்பு நான்கு இலக்க லாட்டரி குலுக்கலை ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே நடத்த அரசாங்கம் அனுமதிக்கும். 

தற்போது ஆண்டுக்கு 22 முறையாக இருந்து வரும் அந்த சிறப்பு லாட்டரி குலுக்கு இனி எட்டாக குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இன்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முறைகேடான வருமானத்தின் மீது நமக்கு ஆர்வமில்லை. ஆகவே, நிதியமைச்சர் என்ற முறையில்  சிறப்பு லாட்டரி குலுக்கல் நடத்த வழங்கப்பட்ட அனுமதியை நான் ரத்து செய்கிறேன் என்றார் அவர்.

ஆண்டுக்கு எட்டு முறையாக இருந்த சிறப்பு லாட்டரி குலுக்கலை முன்னாள் அரசாங்கம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 முறையாக அதிகரித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.