ECONOMY

தாமான் ஸ்ரீ அம்பாங் பொது நூலகக் கட்டுமானம் அடுத்தாண்டு ஏப்ரலில் முற்றுப் பெறும்

5 டிசம்பர் 2022, 7:45 AM
தாமான் ஸ்ரீ அம்பாங் பொது நூலகக் கட்டுமானம் அடுத்தாண்டு ஏப்ரலில் முற்றுப் பெறும்

 ஷா ஆலம், டிச 5- கட்டுமானப் பணிகளில் சுணக்கத்தை எதிர்நோக்கியுள்ள தாமான் ஸ்ரீ அம்பாங் வட்டார பொது நூலகம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய குத்தகையாளரால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க இயலாத காரணத்தால் தேக்கமடைந்த அதன் கட்டுமானப் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி மறுபடியும் தொடங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி கடந்த நவம்பர் 7ஆம் தேதிக்குள் 64 விழுக்காட்டு கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எனினும், இதுவரை 54 விழுக்காட்டுப் பணிகள் மட்டுமே பூர்த்தியடைந்துள்ளன என்று அவர் சொன்னார்.

புதிய குத்தகையாளர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி நியமிக்கப்பட்டு 4ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட காலக் அவகாசத்துடன் ஒப்பிடுகையில் 12 விழுக்காடுப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாமலிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று லெம்பா ஜெயா உறுப்பினர் ஹனிசா முகமது தல்ஹா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.