ad
ECONOMY

RM28.3 லட்சம் நிதி ஒதுக்கீடு மாநில இளைஞர்களுக்கான திட்டமிடலை துரிதப்படுத்துகிறது

29 நவம்பர் 2022, 4:27 AM
RM28.3 லட்சம் நிதி ஒதுக்கீடு மாநில இளைஞர்களுக்கான திட்டமிடலை துரிதப்படுத்துகிறது

ஷா ஆலம், நவம்பர் 29: சிலாங்கூர் இளைஞர் அணி திரட்டலுக்கு (PeBS) ரிங்கிட் 28.3 லட்சம் நிதி செலுத்தப்பட்டது மூலம் அடுத்த ஆண்டு மாநில சட்டமன்ற மட்டத்தில் திட்டத்தின் திட்டமிடல் விரைவு படுத்த முடியும்.

அதன் தலைவர் முகமது அக்மல் அப்துல் ஹலிம் கூறுகையில், ஒரு மாநில சட்டசபைக்கு RM20,000 ஆக இருந்தது, அது அதிகரித்து RM25,000 மாக ஆக்கப்பட்டுள்ளது,  பல திட்டங்களை செயல்படுத்த உதவும்.

"அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நான்கு அல்லது ஐந்து கொள்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம், ஆனால் இப்போது ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கும் PeBS தலைவர்களை நியமிக்கும் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது மற்றும் டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் மாறும் போது, கொள்கையும் மாறும். இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் தன்னார்வலர்களின் (சேவை) தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.

"அடுத்த ஆண்டு ஏசான் மக்கள் விற்பனை மற்றும் சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் (அனிஸ்) போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்," என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

2023 ஆம் ஆண்டு சிலாங்கூர் பட்ஜெட்டில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தபடி, மாநிலத்தில் இளைஞர்களின் நிகழ்ச்சி நிரலை மேம்படுத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஒதுக்கீட்டு வழங்கியது அவர் பாராட்டினார்.

"ஒதுக்கீடுகள் அதிகரிப்பை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு மாநில சட்டமன்றத்தின் PeBS-ஐ முழுமையாக பயன்படுத்த முடியும்.

கடந்த ஆண்டு PeBS க்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அந்தந்த பகுதிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. சிலாங்கூரில் இளைஞர்களின் வளர்ச்சியை தீவிரமாக எடுத்துக் கொண்டதற்காக மாநில அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாநில வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த, குழுவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கிய முறையில் செயல்படுத்தப்படுவது உறுதி செய்வதற்கு மாநில அரசுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான இணைப்பு PeBS நிறுவப்பட்டதாக அமிருடின் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.