ECONOMY

சிலாங்கூரில் வெள்ள நிலை சீரடைகிறது- 56 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

28 நவம்பர் 2022, 6:01 AM
சிலாங்கூரில் வெள்ள நிலை சீரடைகிறது- 56 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

ஷா ஆலம் நவ 28- சிலாங்கூர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நேற்றிரவு 10.32 மணி நிலவரப்படி 92 குடும்பங்களை சேர்ந்த 323 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.

சிலாங்கூரிலும் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கம் கூறியது. 

கோல சிலாங்கூர், பண்டார் பாரு தேசியப் பள்ளியில் 36 பெரியவர்கள், 17 சிறார்கள் மற்றும் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய 56 பேர் இன்னும் தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.

பகாங் மாநிலத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் இரு துயர்  துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர். பேராக் மாநிலத்தில் இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு 63 குடும்பங்களைச் சேர்ந்த 199 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கின் பல பகுதிகளில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.