ஷா ஆலம், நவ. 28- விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் தங்கள் தொழிலை மேம்படுத்த ஐ-அக்ரோ கடனுதவித் திட்டத்தின் வழி 50,000 வெள்ளி வரை பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்திட்டத்திற்கு microcredit.selangor.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அதிகாரிகள் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.
ஐ-அக்ரோ கடனுதவித் திட்டத்தின் மூலம் ஹிஜ்ரா வழங்கும் 50,000 வெள்ளி கடனுதவி விவசாய தொழில்முனைவோர் துரித வளர்ச்சி காண உதவும் என அந்த வாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த கடனுதவித் திட்டதிற்கு விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள் வருமாறு-
- மலேசிய குடிமகன் இருக்க வேண்டும்
- சிலாங்கூர் பிரஜைகளாக அல்லது ஐந்தாண்டுகளுக்கு மேல் சிலாங்கூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
- சிலாங்கூரில் வாக்காளராக இருக்க வேண்டு
- மனுதாரர் வயது 18 முதல் 65க்குள் இருக்க வேண்டும்
- வர்த்தகம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்
- செல்லத்தக்க வணிக உரிமம் அல்லது லைசென்சை கொண்டிருக்க வேண்டும்.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 5,795 தொழில்முனைவோர் ஹிஜ்ராவிடமிருந்து 9 கோடியே 23 லட்சத்து ஆயிரம்
வெள்ளியை கடனுதவியாகப் பெற்றுள்ளனர்.








