ECONOMY

பிரதமர் வேட்பாளர் பெயரை சமர்பிக்க நாளை 2.00 மணி வரை அவகாசம்

21 நவம்பர் 2022, 7:36 AM
பிரதமர் வேட்பாளர் பெயரை சமர்பிக்க நாளை 2.00 மணி வரை அவகாசம்

ஷா ஆலம், நவ 21-  பிரதமர் வேட்பாளர் பெயரை இஸ்தானா நெகாராவில் சமர்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நாளை 2.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் செய்து கொண்டு விண்ணப்பத்தின் பேரில் இந்த காலக் கெடுவை நீட்டிக்க மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புக் கொண்டதாக இஸ்தானா நெகாரா அதிகாரி டத்தோஸ்ரீ அகமது பாடில் சம்சுடின் கூறினார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு பிரதமர் நியமனம் நிறைவு பெறும் வரை பொறுமையுடனும் அமைதியுடனும் இருக்கும்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நாட்டின் நலனுக்காக புதிய அரசாங்கம் மற்றும் பிரதமர் நியமனப் பணிகள்  சீராக நடைபெற இறைவனை வேண்டிக் கொள்ளும்படி நாட்டு மக்களை மாமன்னர்  கேட்டுக் கொண்டுள்ளார் என அகமது பாடில் சொன்னார்.

தற்போதைய அரசாங்கம் தற்காலிக அல்லது பராமரிப்பு பிரதமரின் கீழ் வழக்கம் போல் செயல்படுவதோடு  நிர்வாகமும் சீராக நடைபெறுவதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.