MEDIA STATEMENT

மஇகா அது போட்டியிட்ட பத்து இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

19 நவம்பர் 2022, 11:02 PM
மஇகா அது போட்டியிட்ட பத்து இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஷா ஆலம் 20 நவ;- பாரிசான் நேஷனல்  பங்காளியான மஇகா அது போட்டியிட்ட பத்து இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

மஇகாவின் துணைத் தலைவர் எம்.சரவணன் மூலம் ஒரு இடத்தை மட்டுமே வென்றது, அவர் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

சரவணன் 5,000 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஐந்து வேட்பாளர்களை தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.

சுங்கை சிப்புட்டில், கட்சியின் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்,ஏழு முனை போட்டியில் ஹராப்பான் எஸ் கேசவனிடம்    தோல்வியடைந்தார். இதில் ஹராப்பானின் எஸ் கேசவனுக்கு 21637 ஓட்டுகள்  கிடைத்தது.

தோல்வியடைந்த மற்ற மஇகா வேட்பாளர்கள் மூன்று துணைத் தலைவர்கள் டி மோகன் உலு சிலாங்கூர் தொகுதிக்கு   நடந்த  ஆறு முனை போட்டியில் 27050 ஓட்டுகள் மட்டுமே பெற்று  பெரிக்காத்தான் நேஷனல்  மொஹமட்  ஹஸ்னிசாமிடமும்(46823 ஓட்டுகள்) தோல்வியை தழுவினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.