ஷா ஆலம் 20 நவ- இன்று அதிகாலை பெரும்பாலான நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஹராப்பானுக்கு போதுமான ஆதரவு இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தொகுதியை கொண்டுள்ளது என்று கூறினார்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “111, 112 என்ற எண்ணைக் கடந்துவிட்டோம்.
இருப்பினும், அன்வார் தனக்குக் கிடைத்த ஆதரவை வெளியிட மறுத்து விட்டார், மேலும் அது அகோங்கிடம் சமர்ப்பித்த பின்னரே தெரியவரும் என்றார்.








