ஷா ஆலம், நவ 20- அம்பாங் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவரான டத்தோ ஜூரைடா கமாருடின் இம்முறை அத்தொகுதியை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்டதோடு வைப்புத் தொகையையும் இழந்தார்.
பார்ட்டி பங்சா மலேசியா கட்சி சார்பில் போட்டியிட்ட அவருக்கு வெறும் 4,589 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட ரோட்சியா இஸ்மாயில் 29,681 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியைக் கைப்பற்றினார். ரோம்சியாவுக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 56,754 ஆகும்.








