டமன்சாரா, நவ19- காலை 8.10 மணிக்கெல்லாம் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட டேசா அமான் வாக்கு நிலையத்தில் வாக்காளர்கள் வரிசை நிற்க தொடங்கி விட்டனர். மாலையானால் மழை பெய்கிறது. எனவே மழைக்கு முன் எனது கடமையை செய்ய வந்து விட்டேன் என்று பலர் கூறினர்.

அதையடுத்து மெர்பாவ் செம்பா இடைநிலை பள்ளி , வாக்களிப்பு மையத்திற்கு சென்ற போது வாகன நெரிசல் சுங்கை பூலோ- கோல சிலாங்கூர் சாலையில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்களிப்பு மையம் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இங்கும் வாக்காளர் கூட்டம் அலை மோதியது.
அமைதியான முறையில் வாக்களிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. போண்டோக் பன்னாசும் ஒரு சில இடங்களில் கிடையாது. ஆனால் ஒரு சில இடங்களில் தேசிய முன்னணியின் சிறிய அளவிலான பொண்டோக் பன்னாஸ் போடப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் எந்த வித அசம்பாவிதங்கள் இன்றி காலை 10.00 அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதே போல் தான் டமன்சாரா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்போங் காயூ ஆரா, மற்றும் பண்டார் உத்தா தேசியப் பள்ளி வாக்களிப்பு மையங்களும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
வாக்காளர்களின் அரசியல் முதிர்ச்சியை இம்முறை காண முடிகிறது. சீனர், மலாய்க்காரர், இந்தியர்கள் அனைவரும் டமன்சாரா, சுங்கை பூலோ, கோல சிலாங்கூர் ஆகிய தொகுதிகளில் அமைதியாக வாக்களிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதே போல் நிலைமை மாலை 6 மணி வரை நீடிக்க வேண்டும் எதிர் பார்ப்போம்.
செய்தி- சுப்பையா சுப்ரமணியம்







