சுபாங்.நவ.17- சுங்கை பூலோ தொகுதி வேட்பாளர் டத்தோ ரமணனுக்கு ஆதரவாக நேற்று பேசிய கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் கைரி அம்னோவை மாற்றம் வேண்டும் என்றால் நாட்டு மக்களை பயன்படுத்த கூடாது. கட்சித் தேர்தலில் பேச வேண்டிய விவகாரத்தை பொதுத் தேர்தலில் விவாதிப்பது தேவையற்றது என்று அவர் கைரியை கடுமையாக சாடினார். சுங்கை பூலோ நம்பிக்கை கூட்டணியின் கோட்டை. இங்கு கைரியின் ஜம்பம் பலிக்காது.
முட்டாள்தனமாக பேராக் மாநில பாஸ் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார்.அன்வாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம். அவர் ஜ.செ.க.வுடன் இணைந்து செயல் படுகிறார் என்று இனவாதத்தை தூண்டுகிறார். பல்லின கொண்ட மலேசியாவில் இனங்களுக்கு இடையிலான நட்பு உறவை சீர்குழைக்கிறார். நான் நாட்டில் உள்ள அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடன் தொடர்ந்து செயல்படுவேன். நாட்டு நலன் முக்கியம்.
சொர்க்கமும் நகரமும் பாஸ் கட்சி, தனது உடைமை போல் பிதற்றுகின்றனர். நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தால் சொர்க்கம் கிடைக்காது என்று முட்டாள்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர்.
நான் முன்பு பாஸ் கட்சியின் அமரர் டத்தோ பட்சில் நீர், டத்தோ ஸ்ரீ தோக் குரு நிக் அசிஸ் ஆகியோரை மதிக்கிறேன் என்று பலத்த கைத்தட்டளுக்கு இடையே கூறினார்.








