அம்பாங், நவம்பர்.9- அம்பாங் தொகுதியில் 9 பேர் போட்டியிட்டாலும், அம்பாங் தொகுதி வாக்காளர்கள் ஆதரவு தனக்கு இருக்கும் வரை நான் வெற்றி பெறுவேன் என்று அம்பாங் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ரோட்சியா இஸ்மாயில் நம்பிக்கையோடு கூறினார்.
மாற்றம் வேண்டும் என்போரே பாக்காத்தான் பக்கம் வாருங்கள் நம் எதிர் காலத்தை மாற்றிட வலுவான ஆதரவு வழங்கி, நான் வெற்றி பெற அம்பாங் தொகுதி வாக்காளர்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வேளையில் இங்கு இருக்கும் மக்களுக்கு நான் நிறை சேவைகளை செய்ய ஆசை படுகிறேன் என்று இன்று தாமான் டாகாங் இரவு சந்தையில் மக்களை சந்தித்த போது அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கு இருக்கும் வாக்காளர்கள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்றும் நான் பெரிதாக நம்புகிறேன் என அவர் கூறினார்.
ஆர்.பார்த்திபன்







