ad
ECONOMY

ஹராப்பான் வேட்பாளர் சிப்பாங்கை ஒரு விருப்பமான சுற்றுலா மையமாக மாற்ற விரும்புகிறார்

8 நவம்பர் 2022, 6:15 AM
ஹராப்பான் வேட்பாளர் சிப்பாங்கை ஒரு விருப்பமான சுற்றுலா மையமாக மாற்ற விரும்புகிறார்

சிப்பாங், நவ 8: பக்காத்தான் ஹராப்பான் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், சிப்பாங் ஒரு சிறந்த சுற்றுலா மையமாக மேம்படுத்த பாடுபடுவார்.

நகர்ப்புறம், புறநகர் மற்றும் கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அய்மான் அதிரா சாபு, ஆர்வம் கொண்டுள்ளார்.

கடலோர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சிப்பாங் ஒரு சுற்றுலாத் தலமாக

வலுப்படுத்த முடியும்.சிப்பாங் மாவட்டத்தில் மீனவர்களும் உள்ளனர், எனவே முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்று நேற்று பாகான் லாலாங் மேடான் செலேரா குழு பயண அமர்வின் போது அவர் கூறினார்.

வர்த்தகர்களும் பார்வையாளர்களும் இப்பகுதியில் அதிக செயல்பாடுகளை விரும்புகிறார்கள், இது நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும் என்று அய்மான் அதிரா கூறினார்.

 பாகான் லாலாங்கில் வார இறுதி நாட்களில் மக்கள் சுற்றுலா மேற்கொள்வதால் கூட்ட

நெரிசல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது, அதை  மேம்படுத்த  சாலை போக்குவரத்து போன்ற  இதர சுற்றுலா வசதிகள் மீது ஆய்வு நடத்தப்பட வேண்டும், என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.