கோல சிலாங்கூர், நவ 6- கோல சிலாங்கூர் தொகுதியில் பழைய வாக்காளர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில் முதன் முறையாக இத்தேர்லில் வாக்களிக்கும் இளம் தலைமுறையினரை ஈர்ப்பதிலும் தாம் முனைப்பு காட்டவுள்ளதாக அத்தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் கூறுகிறார்.
தாம் சார்ந்துள்ள தொகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் களைவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரப்போவதாக முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
நான் மக்களுடன் அணுக்கமாக இருக்கும் அதேவேளையில் அவர்களுடன் எப்போதும் இருப்பேன் என்பதையும் உணர்த்த விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தொகுதியில் நிதியமைச்சரும் தேசிய முன்னணி வேட்பாளருமான டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ரூள் தெங்கு அப்துல் அஜிசை எதிர்த்து டாக்டர் ஜூல்கிப்ளி போட்டியிடுகிறார்.
தெங்கு ஸப்ருள் தவிர்த்து பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது நோர் முகமது சஹார், பெஜூவாங் வேட்பாளர் முகமது சாய்ட் ரோஸ்லி ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் 862 வாக்குகள் பெரும்பான்மையிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு 8,498 வாக்குகள் பெரும்பான்மையிலும் ஜூல்கிப்ளி இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.








