ஷா ஆலம், நவ 5- கிழக்கு கரை மாநிலங்களைச் சேர்ந்த மூன்று
வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக
இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் மூவரும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு எதிராக வேறு கட்சி
சார்பிலும் சுயேச்சையாகவும் போட்டியிடுவதுதான் இதில் வியப்புகுரிய
விஷயமாக உள்ளது.
பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான டத்தோ சே
அப்துல்லா மாட் நாவி தும்பாட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில்
போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஸ் கட்சியின் மும்தாஸ் முகமது
நாவியும் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் வான் முகமது ஜொஹாரி
வான் ஓமாரும் போட்டியிடுகின்றனர்.
கோல நெருஸ் தொகுதியில் முன்னாள் பாஸ் கட்சித் தலைவரான டத்தோ
டாக்டர் முகமது கைருடின் அமான் ரசாலி பாஸ் கட்சியைச் சேர்ந்த
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அலியாஸ் ரசாக்கை எதிர்த்து
போட்டியிடுகிறார். ஹராப்பான் கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடும்
வேட்பாளர் சுஹாய்மி ஹஷிம் ஆவார்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து நீக்கப்பட்ட வோங் தாக்
சுயேச்சை வேட்பாளராக அக்கூட்டணி சார்பில் போட்டியிடும் யோங்
ஷைபுரா ஓத்மானை எதிர்த்து பெந்தோங் தொகுதியில் களமிறங்குகிறார்.
தேசிய முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ லியோ
தியோங் லாய் போட்டியிடுகிறார்.








