ஷா ஆலம், நவ 5- சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கும் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் போட்டியிடும் அந்த நான்கு வேட்பாளர்களும் புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் அமானா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் அஸ்லி யூசுப், தேசிய முன்னணி சார்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஹஸாத்துல் இஷாம் அப்துல் ஜாலில், பெஜூவாங் தானா ஆயர் கட்சி சார்பில் முகமது ரபிக் ரஷிட் அலி, பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் டாக்டர் அஃபிப் பஹாருடின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.








