ஷா ஆலம், நவ 5- பெரும் திரளான ஆதரவாளர்களின் வெற்றி
முழக்கத்துடன் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை வேட்பு மனுவைத்
தாக்கல் செய்தார்.
ஐந்து முனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் கெஅடிலான் கட்சியின்
உதவித் தலைவருமான அமிருடினுக்கு வாக்குச் சீட்டில் இரண்டாவது
இடம் கிடைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்த தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் டத்தோஸ்ரீ அஸ்மின்
அலி, தேசிய முன்னணி சார்பில் டத்தோ மெகா ஜூல்கர்னாய்ன்
ஓமாருடின், பெஜூவாங் தானா ஆயர் கட்சி சார்பில் டத்தோ டாக்டர்
அஜிஸ் ஜமாலுடின் முகமது தாஹிர் மற்றும் சுயேச்சையான ஜூல்கிப்ளி
அகமது ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சிலாங்கூரில் கவனத்தை ஈர்க்கும் மேலும் சில தொகுதிகளில்
போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு-
சுங்கை பெசார்
சைபோல்யாஸான் மேய் யூசுப் – பக்கத்தான் ஹராப்பான்
டத்தோஸ்ரீ ஜமால் முகமது யூசுப்- தேசிய முன்னணி
டத்தோ முஸ்லிமின் யாஹ்யா – பெரிக்கத்தான் நேஷனல்
அஸ்மாவார் சமாட் – பெஜூவாங்
கோல சிலாங்கூர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது – பக்கத்தான் ஹராப்பான்
தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ரோல் தெங்கு அப்துல் அஜிஸ்- தே.மு.
முகமது நோர் முகமது சஹார்- பெரிக்கத்தான் நேஷனல்
முகமது சாய்ட் ரோஸ்லி- பெஜூவாங்








