ECONOMY

பெட்டாலிங் ஜெயாவில் ஞாயிறன்று பல சாலைகள் மூடப்படும்

3 நவம்பர் 2022, 5:34 AM
பெட்டாலிங் ஜெயாவில் ஞாயிறன்று பல சாலைகள் மூடப்படும்

ஷா ஆலம், நவ 3- வாகனமில்லா தினத்தை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இச்சாலைகள் மூடப்படும் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

அக்காலக்கட்டத்தில் ஜாலான் யோங் சூக் லின் சாலை முழுமையாகவும் ஜாலான் சிலாங்கூர்-ஜாலான் பெஞ்சாலா- பெஞ்சாலா சாலை சுற்றுவட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்கு மூடப்படும்.

மேலும், ஜாலான்  பாடாங் 4/48- அசுந்தா சாலை சுற்று வட்டம், ஜாலான் சிலாங்கூர், புலாத்தான் சிலாங்கூர பிஜே ஸ்டேட் ஆகியவையும் போக்குவரத்துக்கு மூடப்படும் பகுதிகளில் அடங்கும்.

இந்த வாகனமில்லா தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஓட்டப்பந்தயம், பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.