ECONOMY

சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23இல் நடைபெறும்- 25ஆம் தேதி படஜெட் தாக்கல்

28 அக்டோபர் 2022, 7:34 AM
சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23இல் நடைபெறும்- 25ஆம் தேதி படஜெட் தாக்கல்

ஷா ஆலம், அக் 28-  ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும்  நவம்பர் 23ஆம் தேதியன்று தொடங்கும். இக்கூட்டத் தொடரின் இரண்டாம் நாளன்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல்  செய்யப்படும்.

இந்த கூட்டத் தொடர் நவம்பர் 23 முதல் 24 வரையிலும், நவம்பர் 28 முதல் 30 வரையிலும், டிசம்பர் 5 முதல் 6 வரையிலும் நடைபெறும். நவம்பர் 25ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்ற அலுவலகம் தெரிவித்தது.

வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாலை 3.00 மணிக்கு தாக்கல் செய்வார்.

அக்டோபர் 28, அக்டோபர் 31, நவம்பர் 1 முதல் 4 மற்றும் நவம்பர் 7 முதல் 10 வரை நடத்தப்பட வேண்டிய சட்டமன்ற கூட்டத் தொடர்  15 வது பொதுத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சட்டமன்ற அலுவலகம் கடந்த 20ஆம் தேதி  அறிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.