கோலாலம்பூர், அக் 28- நாட்டின் 25வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திடீர் உயர்வு கண்ட பெரும்பாலான விமானக் கட்டணங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன.செப்டம்பர் 16 முதல் 20 வரையிலான காலக்கட்டத்தில் (15வது பொதுத் தேர்தலுக்கான பயண காலம்) உள்நாட்டு பயணச் சேவைக் கட்டணம் மீது மாவ்காம் எனப்படும் மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் நடத்நிய ஆய்வில் தீபகற்ப மலேசியாவில் ஒருவழி பயணத்திற்கான கட்டணம் 185 வெள்ளியாக இருந்தது கண்டறியப்பட்டது.
சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களுக்கிடையிலான கட்டணம் 188 வெள்ளியாகவும் தீபகற்ப மலேசியாவுக்கும் சபா மற்றும் சரவா மாநிலங்களுக்கிடையிலான கட்டணம் 296 வெள்ளியாகவும் உள்ளது.
வாக்களிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ள மாணவர்கள் நடப்பிலுள்ள சிறப்பு கட்டணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் பொதுமக்களுக்கு வாய்ப்பினை வழங்கும் நோக்கில் சிறப்பு கட்டணக் கழிவை விமான நிறுவனங்கள் வழங்கியுள்ளது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக மாவாகாம் நிர்வாத் தலைவர் டத்யோஸ்ரீ சரிபுடின் காசிம் தெரிவித்தார்.
குறைந்த கட்டணத்தை விதிப்பதன் மூலம் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு உதவ விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்
ALAM SEKITAR & CUACA
தேர்தல் சமயத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் குறைப்பு
28 அக்டோபர் 2022, 4:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

national
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
7 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




