ECONOMY

இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்தது- 14 பேர் பலி

25 அக்டோபர் 2022, 12:05 PM
இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்தது- 14 பேர் பலி

ஜாகார்த்தா, அக் 25 - கிழக்கு நூசா தெங்கரா மாநிலத்திற்கு  அருகே கடலில் நேற்று இந்தோனேசிய படகு தீப்பிடித்ததில் 14 பேர் உயிரிழந்ததாக மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 240 பேரில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 226 பேர் உயிர் பிழைத்தனர் என்று உள்ளூர் மீட்பு அதிகாரியான ஐ புடு சுதயானாக் தெரிவித்தார். கப்பலில் இருந்த மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கப்பல் ஏன் தீப்பிடித்தது? மற்றும் பயணத்தின் நோக்கம் என்ன? இன்னும் உறுதிப்

படுத்தப் படவில்லை.

அந்த  கப்பல் பயணம் செய்வதற்கு ஏற்ற நிலையில் இருந்ததாக உள்ளூர் போக்குவரத்து நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கப்பலில் 177 பேர் இருந்ததாகவும் அவர்களில்  240 பேரை மீட்பு படையினர் வெளியேற்றியதாகவும்  கூறப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.