ECONOMY

மறுசுழற்சி பொருள்களைக் கொடுத்து பற்றுச் சீட்டுகளைப் பெறுங்கள்- எம்.பி.எஸ்.ஏ. அழைப்பு

12 அக்டோபர் 2022, 5:10 AM
மறுசுழற்சி பொருள்களைக் கொடுத்து பற்றுச் சீட்டுகளைப் பெறுங்கள்- எம்.பி.எஸ்.ஏ. அழைப்பு

ஷா ஆல்ம், அக் 12- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மறுசுழற்சி பொது தினத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்களிடமுள்ள மறுசுழற்சி பொருள்களை செக்சன் யு5இல் உள்ள மறுசுழற்சி மையத்தில் கொடுத்து பாசாராயா 99 ஸ்பீட்மார்ட்டில் பொருள்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.

மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஷா ஆலம் மாநகர்வாசிகள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான இந்த திட்டம் ஷா ஆலம், செக்சன் யு2 பகுதியில்  நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் பங்கேற்கும் வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டு கலைப் பொருள்களை உருவாக்கும் அங்கம் ஆகியவையும் இடம பெறும் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பொது தினத்தில் பங்கேற்று பயனடையுமாறு நகராண்மைக் கழகம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 22ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இந்த மறுசுழற்சி பொது தினமும் ஒன்றாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.