ALAM SEKITAR & CUACA

எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் மீன் பிடி போட்டி- 22,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

11 அக்டோபர் 2022, 3:27 PM
எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் மீன் பிடி போட்டி- 22,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், அக் 12- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் (எம் பி.எஸ்.ஏ.) அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்  மீன்பிடி போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெறுவோருக்கு 22,000  ரிங்கிட் வரை ரொக்கப் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது.

மாநகர் மன்றத்தின் 22வது ஆண்டு நினைவு விழாவையொட்டி தாமான் தாசேக் ஷா ஆலமில் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இப்போட்டி நடைபெறும் என மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெறுவோருக்கு 10,022 ரிங்கிட்டும்  மூன்றாம் இடத்தைப் பிடிப்போருக்கு 2,022 ரிங்கிட்டும் நான்கு முதல் 15வது இடங்களில் வருவோர் ஆறுதல் பரிசாக தலா 200 ரிங்கிட்டும்  பெறுவார்கள்.

ஆர்வமுள்ளவர்கள்  03-5510 5133 இணைப்பு 1660 அல்லது 1284 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம் 100 ரிங்கிட்டாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.