மலாக்கா, அக் 10- சுங்கை மலாக்காவின் பத்து ஹம்பார் பகுதியில் நீர் மட்டம் இன்று காலை 9.00 மணியளவில் அபாய அளவை விட 2 மீட்டர் உயர்ந்து 2.17 மீட்டராக அதிகரித்துள்ளதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை தனது அகப்பக்கத்தில் கூறியது.
ஜாசின், தெலுக் ரிம்பாவிலுள்ள சுங்கை கெசாங்கில் நீர் மட்டம் 3.26 மீட்டராகவும் சுங்கை டுயோங் ஆற்றில் நீர் மட்டம் 1.71 மீட்டராகவும் உள்ளதாக அது தெரிவித்தது.
இதனிடையே, கிளேபாங் பெசார், சுங்கை மாலிமில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை விட அதிகரித்து 1.56 மீட்டராக உயர்வு கண்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணிவரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, புயலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
சிலாங்கூரில் கிள்ளான், பெட்டாலிங், கோல லங்காட், சிப்பாங், புத்ரா ஜெயா மற்றும் மலாக்காவில் இந்நிலை நீடிக்கும் என்றும் அது கூறியுள்ளது.







