ECONOMY

அக்டோபர் 29 ஆம் தேதி மாநாட்டில் ஹராப்பான் 15வது பொது தேர்தலை அறிவிக்கும்

9 அக்டோபர் 2022, 1:27 PM
அக்டோபர் 29 ஆம் தேதி மாநாட்டில் ஹராப்பான் 15வது பொது தேர்தலை அறிவிக்கும்

ஈப்போ, அக். 9: பக்காத்தான் ஹராப்பான் மாநாடு அக்டோபர் 29 ஆம் தேதி ஈப்போ சர்வதேச மாநாட்டு மையத்தில் (ஐஐசிசி) நடைபெறும் என்று பேராக் பிஎச் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.

ஒரு நாள் மாநாட்டில் ஹராப்பானின் பல முக்கிய தலைவர்கள் உட்பட, கெஅடிலான் மக்கள் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட சுமார் 5,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்

ஹராப்பான் பிரதமர் வேட்பாளர், நாடு முழுவதும் ஹராப்பானின் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தீம் பாடல் மற்றும் 15வது பொது தேர்தலில் பயன்படுத்தப்படும் சின்னம் ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் மாநாட்டின் மூலம் அறிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்

மாநாட்டுடன் இணைந்து, மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார், லுமூட், தம்புன் மற்றும் தாப்பா ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் பிஎச் ஏற்பாடு  செய்துள்ள  திட்டதையும் அறிவிக்கும்   என  அவர் கூறினார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.