ECONOMY

பெற்ற மகனே தந்தையைத் தாக்கினார்- முதியவருக்கு கட்டை விரல் முறிந்தது

16 செப்டெம்பர் 2022, 7:41 AM
பெற்ற மகனே தந்தையைத் தாக்கினார்- முதியவருக்கு கட்டை விரல் முறிந்தது

ஜெர்த்தே, செப் 16- பெற்ற மகனே  தன் வயது முதிர்ந்த தந்தையைத் தாக்கி காயப்படுத்தினார். இங்குள்ள கம்போங் பெங்காலான் செந்தோலில் கடந்த  புதன் கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த முதியவரின் கட்டை விரலில் முறிவு ஏற்பட்டது.

மகன் கேட்ட பணத்தைக் கொடுக்காத காரணத்தால் 71 வயதான அந்த முதியவர் தாக்குதலுக்குள்ளானதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரோசாக் முகமது கூறினார்.

தந்தை தந்தையுடன் அதே வீட்டில் வசித்து வந்த அந்த 50 வயது ஆடவர் சம்பவ தினத்தன்று தன் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே வெகுடெழுந்த அந்த ஆடவர் பிரம்பினால் தன் தந்தையைத் தாக்கியுள்ளார் என அப்துல ரோசாக் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான முதியவர் இரத்தம் வழிந்த நிலையில் அருகிலுள்ள தன் மகளின் வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறியுள்ளார். தன் தந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த அவரின் 43 வயது மகள் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார் என்றார் அவர்.

இப்புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த சந்தேகப்பேர்வழியை அவரது வீட்டில் கைது செய்ததோடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பிரம்பையும் கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.