ad
ECONOMY

“சுற்றுலா மலேசியா” ; நிறுவனம் சுற்றுலா பயணிகளுடன் மீண்டும் இணைவதற்காக ஊக்குவிப்பாக சுற்றுலா சந்தைகளை நடத்துகிறது

15 செப்டெம்பர் 2022, 9:14 AM
“சுற்றுலா மலேசியா” ; நிறுவனம் சுற்றுலா பயணிகளுடன் மீண்டும் இணைவதற்காக ஊக்குவிப்பாக சுற்றுலா சந்தைகளை நடத்துகிறது

கோலாலம்பூர், செப்டம்பர் 15 - சுற்றுலா மலேசியா தனது வெளிநாட்டு அலுவலகங்கள் வழியாக ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் துருக்கியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை மலேசியாவுக்கு மீண்டும் ஈர்க்கும் வகையில்  ஊக்குவிப்பு கண்காட்சி மற்றும் சந்தைகளை ஏற்பாடு செய்கிறது.

சுற்றுலா மலேசியா ஒரு அறிக்கையில், மாஸ்கோவில் நடைபெறும் முதல் சுற்றுப்பயண ஊக்குவிப்பு சந்தையைத்  தொடர்ந்து டாஷ்கண்ட், அல்மாட்டி மற்றும் இஸ்தான்புல்லிலும் செப்டம்பர் 12 முதல் 20 வரை நடைபெறும்.

ரோட்ஷோக்கள் மலேசிய விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் வாங்குபவர்கள் இருவரும் வணிகம்-டு-வணிகம் (B2B) அமர்வுகள் மற்றும் தயாரிப்பு விளக்கக்காட்சிகள் பங்கேற்பதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

"மலேசியாவின் இன மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மிகப்பெரிய ஈர்ப்புகள் ஒன்றாகும், இதன் விளைவாக ஒரு கலவையான ஆனால் இணக்கமான பாரம்பரியம் நமது திருவிழாக்கள், கட்டிடக்கலை, ஆடை, மொழி, உணவு வகைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற அம்சங்களில் வெளிப்படுகிறது.

மாஸ்கோவில் முதல் அமர்வின் போது, கடந்த இரண்டு வருடங்கள் எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தாலும், நமது சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து மலேசியா அதன் ஆரம்ப இலக்கான இருபது லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தாண்டியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மலேசிய சுற்றுலா துறையின் செயல் துணை தலைமை இயக்குநர் (திட்டமிடல்) இஸ்கந்தர் மிர்சா முகமட் யூசோப் கூறினார்.

சுற்றுலா மலேசியா இந்த ஆண்டுக்கான சுற்றுலா வரவுகளில் RM2680 கோடியுடன் 920 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வரவேற்கும் இலக்கை திருத்தியுள்ளது என அவர் கூறினார்.

அறிக்கையின்படி, மலேசியா தனிமைப்படுத்தல் அல்லது புறப்படுவதற்கு முந்தைய மற்றும் வருகையில் கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவைகள் இல்லாமல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான நுழைவு நடைமுறைகளை தளர்த்தியுள்ளது, அத்துடன் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களுக்கு முன்நிபந்தனையாக பயணக் காப்பீடு தேவையில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.