ECONOMY

சாலை விபத்தில் ஆடவர் மரணம்- குழந்தை உள்பட அறுவர் காயம்

4 செப்டெம்பர் 2022, 4:58 AM
சாலை விபத்தில் ஆடவர் மரணம்- குழந்தை உள்பட அறுவர் காயம்

ஷா ஆலம், செப் 4- கார் மற்றும் நான்கு சக்கர இயக்க வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததோடு குழந்தை உள்பட அறுவர் காயங்களுக்கு உள்ளாயினர்.

இந்த கோரச் சம்பவம் ஈப்போ-கிரீக் சாலையின் 59.5வது கிலோமீட்டரில் நேற்று நிகழ்ந்ததாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஓமார் பக்தியார் யாக்கோப் கூறினார்.

அந்த ஆடவர் பயணித்த பெரேடுவா அக்ஸியா ரகக் கார் எதிர்த்தடத்தில் நுழைந்து நிசான் நவாரா வாகனத்துடன் மோதியாக அவர் சொன்னார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது பெரேடுவா அக்ஸியா கார் கோல கங்சாரிலிருந்து கிரீக் நோக்கியும் நிசான் நவாரா வாகனம் கோல கங்சார்  நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிசான் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு உயிருடற்சேதம் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், அக்ஸியா காரை ஓட்டிய 35 வயது ஆடவர் மற்றும் இரண்டு மாதக் குழந்தையும் காயங்களுக்குள்ளானார்கள் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.