ECONOMY

2023 வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 28 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்- நிதியமைச்சர் உறுதி

7 ஆகஸ்ட் 2022, 10:06 AM
2023 வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 28 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்- நிதியமைச்சர் உறுதி

ஷா ஆலம், ஆக 7- நாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்படாது என்பதோடு நாடாளுமன்ற காலண்டர் படி வரும் அக்டோபர் 28 ஆம் தேதியே நடைபெறும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்

வரவு செலவுத் திட்டம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என வெளியானத் தகவலில் உண்மை இல்லை என்று அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படும் என்றத் தகவல் வெறும் வதந்தியே  எனக் கூறிய அவர், நாடாளுமன்றக் காலண்டர் படிதான் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றார்.

வரும் அக்டோபர்  28 ஆம் தேதிதான் வரவு செலவுத் திட்டத் தாக்கல் என இதுவரை நாடாளுமன்ற காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

நாட்டின் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படலாம் என்று ஆய்வு நிறுவனமான சி.ஜி.எஸ்.-சி.ஐ.எம்.பி. செக்கியூரிட்டிஸ் சென். பெர்ஹாட் கூறியிருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.