ECONOMY

ஹராப்பானை வலுப்படுத்த எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கமைப்பை உருவாக்குவோம்- அன்வார்

16 ஜூலை 2022, 10:44 AM
ஹராப்பானை வலுப்படுத்த எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கமைப்பை உருவாக்குவோம்- அன்வார்

ஷா ஆலம், ஜூலை 16- புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஏதுவாக பக்கத்தான் ஹராப்பானை வலுப்படுத்த ஜசெக, அமானா, அப்கோ ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படுவோம் என்று  கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

வரும் 15வது பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்காக எந்த எதிர்க்கட்சி கூட்டணியுடனும் ஒத்துழைக்கத் தாம் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர்  கூறினார்.

கருத்து வேற்றுமைகளும் முரண்பாடுகளும் இருந்த போதிலும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து அணுக்கமான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவோம் என்று அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள ஐ.டி.சி.சி. மாநாட்டு மையத்தில் கெஅடிலான் கட்சியின் 16வது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக நான் இருக்கிறேன். அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் அணுக்கமான ஒத்துழைப்பை அவசியம் நல்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். ஆகவே நிர்ணயிக்கப்பட்ட திட்ட இலக்கிகேற்ப தொடர்ந்து செயல்படுவேன் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.