ALAM SEKITAR & CUACA

எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் ஜூலை 17 இல் வாகனமில்லா தினம்

13 ஜூலை 2022, 4:50 AM
எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் ஜூலை 17 இல் வாகனமில்லா தினம்

ஷா ஆலம், ஜூலை 13- ஷா ஆலம் மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டில் வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மாநகரில் வாகனமில்லா தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

மாநகர் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் நோக்கிலான இந்த வாகனமில்லா இயக்கம் இங்குள்ள மெர்டோக்கா சதுக்கத்தில் தொடங்கும் என்று மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த நிகழ்வையொட்டி அதிகாலை 6.30 மணி முதல காலை 9.30 மணி வரை ஷா ஆலம் நகரின் பல சாலைகளை போக்குவரத்துக்கு மூடப்படும் என்று அது தெரிவித்தது.

பெர்சியாரான் பண்டாராயா, பெர்சியாரான் பெர்பண்டாரான், பெர்சியாரான் தசேக், பெர்சியாரான் மஸ்ஜிட், பெர்சியாரான் டத்தோ மந்திரி, பெர்சியாரான் டாமாய் ஆகியவையே போக்குவரத்துக்கு மூடப்படும் சாலைகளாகும்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக அந்த நேரத்தில் மேற்குறிப்பிடப்பட்ட சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என வாகனமோட்டிகளை மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.