ECONOMY

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வாடிக்கையாளர் தினம் புதன் கிழமை நடைபெறும

2 ஜூலை 2022, 8:22 AM
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வாடிக்கையாளர் தினம் புதன் கிழமை நடைபெறும

ஷா ஆலம், ஜூலை 2- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் வாடிக்கையாளர் சந்திப்பு தினம் வரும் புதன் கிழமை செக்சன் 9, பிளாசா ஷா ஆலம், எல்.ஜி. தளத்தில்  நடைபெறும்.

காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த  வாடிக்கையாளர் தினத்தில் பயனீட்டாளர்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என்ற மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இங்கு வழங்கப்படும் சேவைகளில் மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்து செலுத்துவது மற்றும் சம்மன்களுக்கு குறிப்பாக போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத்தை செலுத்துவது ஆகியவையும் அடங்கும் என அது குறிப்பிட்டது.

இது தவிர குடியிருப்புகளின் விரிவாக்கம் தொடர்பான புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வது தொடர்பான சேவைகளையும் இங்கு பெற முடியும். 

இந்த வாடிக்கையாளர் தினத்திற்கு வருகை புரியும் முதல் 50 பேருக்கு சுகாதார பாதுகாப்பு சாதனங்கள் அடங்கிய பை வழங்கப்படும் எனவும் மாநகர் மனறம் தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.