ad
ECONOMY

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்கில் ஆக்கப்பூர்வமான வீடியோவைப் பதிவுசெய்து Iphone வெல்லுங்கள்

24 ஜூன் 2022, 9:18 AM
ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்கில் ஆக்கப்பூர்வமான வீடியோவைப் பதிவுசெய்து Iphone வெல்லுங்கள்
ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்கில் ஆக்கப்பூர்வமான வீடியோவைப் பதிவுசெய்து Iphone வெல்லுங்கள்

ஷா ஆலம், ஜூன் 24: ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான வீடியோ போட்டியில் கலந்துகொண்டு Iphone 13 Pro Max மொபைல் போன் பரிசை வெல்லும் வாய்ப்ப்பு  பொதுமக்கள் பெற்றுள்ளனர்.

கோலா லாங்காட்டில் உள்ள டதாரான் பந்தாய் மோரிப்பில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் சுவாரசியமான வீடியோக்களைப் பதிவுசெய்து, அவற்றை நாளை முதல் ஜூன் 27 வரை சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டும்.

பங்கேற்பாளர்கள் #JelajahSelangorPenyayang மற்றும் #KitaSelangor என்ற ஹேஷ்டேக்குகளுடன் 'ரீல்ஸ்' வீடியோவை இன்ஸ்தாகிராம் மற்றும் டிக் டாக்கில் பதிவேற்றுவதன் மூலம் எளிதான நுழைவு முறையைப் பின்பற்ற வேண்டும்.

பங்கேற்பாளர்கள் @amirudinshari, @selangorpenyayang, @mediaselangor மற்றும் டிக் டாக் @amirudinshari வழியாக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன் இன்ஸ்தாகிராம் கணக்கையும் பின்பற்ற வேண்டும்.

காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில்  கலைஞர்களின் இசைப் படைப்புகள், ஏரோபிக் நிகழ்வு, சமையல் போட்டி, மக்கள் விளையாட்டு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.

அதிகமான மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு  மாற்றாக 35 கோடி வெள்ளி நிதியில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது.

சுமார் 25,000 பேர் பயன் பெற்று வந்த கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவு  அன்னையர் திட்டத்திற்கு பதிலாக 30,000 பேர் பயன்பெறக்கூடிய பிங்காஸ் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.