ECONOMY

மக்களின் ஆரோக்கியத்தை மிகவும் திறம்பட பாதுகாக்கச் சிலாங்கூர் அரசுக்குப் பொது மருத்துவ ஆலோசனை குழு  உதவி.

23 ஜூன் 2022, 3:30 PM
மக்களின் ஆரோக்கியத்தை மிகவும் திறம்பட பாதுகாக்கச் சிலாங்கூர் அரசுக்குப் பொது மருத்துவ ஆலோசனை குழு  உதவி.

ஷா ஆலம், ஜூன் 23: சிலாங்கூர் பொதுச் சுகாதார ஆலோசனைக் குழு (செல்பேக்)  அமைப்பின் மூலம் மாநில மக்களின் உடல்  நலத்தைத் திறம்படப் பாதுகாப்பதற்கு சிறப்பாக  நிறுவப்பட்டது.

இக்குழு புதிய யோசனைகளை  வழங்கி, மாநில மக்களின்  உடல் ஆரோக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த  திட்டமிட முடியும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"கோவிட்-19  தொற்று நோயின் போது  பெற்ற நிர்வாக அனுபவத்துடன், சிலாங்கூர் வெற்றியை அடைவதிலும், மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இக்குழு அர்ப்பணிக்கும்   என்று  நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.

"இந்தத் திட்டமானது சுகாதார அமைச்சகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது, இது மாநில அளவில் ஆரோக்கியமான மலேசியா சமூகத்தை  தேசிய அளவில்   உருவாக்குவதை வலியுறுத்துகிறது," என்று அவர் கூறினார்.

மாநிலத் தலைவர்கள், சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத்துறை, மேலும், பல்வேறு துறைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 15 உறுப்பினர்களைச் செல்பேக் என்ற  இக்குழு கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பு பணி குழுவின் முன்னாள் உறுப்பினர்கள், தொழில்துறை சுகாதார  பிரதிநிதிகள், மலேசிய மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் அடங்குவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.