ad
ECONOMY

510 இந்திய தொழில்முனைவோர் ஐ-சீட் மூலம் வணிக கருவி உதவியைப் பெறுகின்றனர்

20 ஜூன் 2022, 7:46 AM
510 இந்திய தொழில்முனைவோர் ஐ-சீட் மூலம் வணிக கருவி உதவியைப் பெறுகின்றனர்

ஷா ஆலம், ஜூன் 20: கடந்த ஆண்டு முதல் சிலாங்கூர் இந்திய அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு (ஐ-சீட்) திட்டத்தின் மூலம் மொத்தம் 510 இந்திய தொழில்முனைவோர் கருவி உதவியைப் பெற்றுள்ளனர்.

ஆண்டுக்கு RM10 லட்சம் ஒதுக்கப்படும் சமூக-பொருளாதார மேம்பாடு திட்டத்தின் வழி கடந்த ஆண்டு 260 தொழில்முனைவோரை உள்ளடக்கியதாகவும், இவ் ஆண்டு மேலும் 250 பேர்களையும் சேர்த்து 510 இந்திய தொழில் முனைவோர் உதவிப் பெற்றனர் என்று சமூக-பொருளாதார மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

“இந்த ஆண்டு மட்டும் எங்களுக்கு 700 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன, அதில் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உண்மையிலேயே தகுதியானவை, இதுவரை 250 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மடிக்கணினிகள் தவிர உபகரண உதவிக்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் தனது தரப்பு ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

“ஆன்லைனில் பொருட்களை விற்பதாகக் கூறி பலர் மடிக்கணினிகளை கேட்கிறார்கள், இந்த விண்ணப்பத்தை நாங்கள் நிராகரிப்போம். விற்பனை பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும், ”என்று அவர் கூறினார்.

இந்தியர்கள் நடத்தும் தொழிலுக்கு ஏற்ப உபகரண உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஐ-சீட் திட்டம் தொடங்கப்பட்டது.

சிலாங்கூர் குடிமக்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர்கள், தனிநபர்கள் மற்றும் முழு குடும்பங்களும் மாதத்திற்கு RM3,000 க்குக் கீழே சம்பாத்தியம் பெறுபவர்கள் மற்றும் மாநிலத்தில் வணிகங்கள் செய்பவர்களே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

கூடுதலாக, வணிகம் சுறுசுறுப்பாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அல்லது தம்பதியினர் (கணவன்/மனைவி) சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டம் அல்லது சிலாங்கூர் சிறு தொழில்முனைவோர் நிதித் திட்டத்தின் கீழ் உபகரண உதவியைப் பெறாதவர்களாக இருக்க வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.