ALAM SEKITAR & CUACA

டெங்கில்,சுங்கை ராமால் தொகுதிகளில் இன்று மாநில அரசின் மருத்துவப் பரிசோதனை இயக்கம்

18 ஜூன் 2022, 4:51 AM
டெங்கில்,சுங்கை ராமால் தொகுதிகளில் இன்று மாநில அரசின் மருத்துவப் பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், ஜூன் 18- டெங்கில் மற்றும் சுங்கை ராமால் தொகுதிகளில் இன்று மாநில அரசின் “சிலாங்கூர் சாரிங்“ இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் நடைபெறுகிறது.

டெங்கில் தொகுதி நிலையிலான இந்த பரிசோதனை இயக்கம் தாமான் கெமிலாங் சமூக மண்டபத்திலும்  சுங்கை ராமால் தொகுதி நிலையிலான இயக்கம் பண்டார் பாரு பாங்கி, செக்சன் 4 சமூக மண்டபத்திலும் நடைபெறும். இவ்விரு இடங்களிலும் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும்.

நாளை ஞாயிற்றுக் கிழமை சீ மீன் சீனப்பள்ளியிலும் (சுங்கை பீலேக் தொகுதி) அம்பாங், தாமான் கோகாஸ் திடலிலும் ( தெராத்தாய் மற்றும் பாண்டான் இண்டா தொகுதிகள்) இந்த இயக்கம் நடைபெறவுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரிய மாமுட் கூறினார்.

அம்பாங்கில் “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ நிகழ்வுடன் சேர்த்து இந்த மருத்துவ பரிசோதனை இயக்கமும் நடத்தப்படும். இத்திட்டத்தில் சுமார் 2,000  பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

சுமார் 34  லட்சம் வெள்ளி செலவில் மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் மூலம் மாநிலத்திலுள்ள சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.