தாவாவ், ஜூன் 12- சபா தாவாவ், ஜாலான் தாவாவ் லாமா, கம்போங் தித்திங்கானில் இன்று விடியற்காலை ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து வீடுகள் நாசமானதோடு இரு பெண்களும் உயிரிழந்தனர்.
கமிஷா மப்பியாசா (வயது 40) மற்றும் சடியா ஜாபர் (வயது 70) ஆகிய இருவரின் உடல்களும் இரட்டை மாடி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் ஜூலியஸ் ஜோன் ஸ்டீபன் கூறினார்.
நேற்று பின்னிரவு 12.53 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து 19 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இரு தீயணைப்பு வாகனங்களில் சம்பவம் இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
ஸ்ரீ தித்திங்கான் தன்னார்வலர் தீயணைப்புத் துறையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தீயை அணைக்கும் பணி அதிகாலை 3.00 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.








