ECONOMY

டிங்கிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 வாடகை வீடுகள் சேதம்

29 மே 2022, 6:34 AM
டிங்கிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 வாடகை வீடுகள் சேதம்

டிங்கில், மே 29- இங்குள்ள கம்போங் ஜெண்டேராம் ஹிலிரில் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் ஒன்பது ஒற்றை மாடி வரிசை வீடுகள் 90 விழுக்காடு சேதமடைந்தன.

இத்தீவிபத்து குறித்து இரவு 9.52 மணிளவில் தகவல் கிடைக்கப்பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

இரவு 10.00 மணிளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

இத்தீவிபத்தில் அந்த ஒன்பது  வாடகை வீடுகளும் 90 விழுக்காடு சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இத்தீபத்தில் யாரும் காயமடையவில்லை. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.

அந்த வீடுகளில் இந்தோனேசியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களை உள்ளடக்கிய 25 பேர் வசித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.