ECONOMY

கிட்டத்தட்ட 30 விழுக்காடு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

16 மே 2022, 3:37 AM
கிட்டத்தட்ட 30 விழுக்காடு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 16: நேற்றைய நிலவரப்படி, நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயது வரையிலான மொத்தம் 1,058,626 சிறார்கள் அல்லது 29.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 16 லட்சத்து 44 ஆயிரத்து 27 சிறார்கள் அல்லது 46.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், 29 லட்சத்து 4 ஆயிரத்து 772 பேர் அல்லது 93.4 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 30 லட்சத்து 2 ஆயிரத்து 404 பேர் அல்லது 96.5 விழுக்காட்டினர் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதே காலகட்டத்தில், மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 64 ஆயிரத்து 239 பேர் அல்லது 68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 71 ஆயிரத்து 113 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களை முடித்துள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 46 ஆயிரத்து 597 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தினசரி டோஸ்களைப் பொறுத்தவரை, 9,511 முதல் டோஸ்கள், 12,441 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 1,196 பூஸ்டர் டோஸ்கள் உட்பட மொத்தம் 23,148 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை  7 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 279 ஆக உயர்ந்துள்ளது

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக மூன்று இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.