ஷா ஆலம், மே 5- சிலாங்கூர் மாநிலத்தில் ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 1,943 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக மாநில சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு கூறியது.அவற்றில் 293 விபத்துகள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக அப்பிரிவின் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்மாட் ஷரியாட் கூறினார்.
மொத்தம் 11 மரண விபத்துகள் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், விபத்துகளைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக சாலையை கவனமுடன் பயன்படுத்தும்படி வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டார்.
மாநிலத்திலுள்ள நகர்ப்புறச் சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. எனினும், அதிக வாகனப் போக்குவரத்து காணப்படும் கோல சிலாங்கூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
ALAM SEKITAR & CUACA
ஓப் செலாமாட் இயக்கம்- சிலாங்கூரில் 1,943 விபத்துகள் பதிவு
5 மே 2022, 2:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

national
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
7 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




