ALAM SEKITAR & CUACA

தொழிலாளர் தின விடுமுறை புதன்கிழமைக்கு மாற்றம்- சிலாங்கூர் அரசு அறிவிப்பு

2 மே 2022, 5:55 AM
தொழிலாளர் தின விடுமுறை புதன்கிழமைக்கு மாற்றம்- சிலாங்கூர் அரசு அறிவிப்பு

ஷா ஆலம். மே 2- நோன்புப் பெருநாள் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தொழிலாளர் தின விடுமுறையை வரும் மே 4 ஆம் தேதி புதன்கிழமைக்கு மாற்ற சிலாங்கூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1951 ஆம் ஆண்டு (சட்டம் 369) விடுமுறைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுக்கேற்ப எடுக்கப்பட்ட இம்முடிவுக்க மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசீம் கூறினார்.

1951 ஆம் ஆண்டு (சட்டம் 369) விடுமுறைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் மந்திரி புசாரின் ஒப்புதல் கிடைக்கபெற்றதைத் தொடர்ந்து சிலாங்கூரில் தொழிலாளர் தின விடுமுறை மே 4 ஆம் தேதி புதன் கிழமைக்கு மாற்றப்படுகிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த விடுமுறை மாற்றம் ஊராட்சி மன்றங்கள் மற்றும் அரசு துணை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அவர் கூறினார்.

பொது விடுமுறை மாற்றம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று வெளியிட்ட அறிக்கையை மாநில அரசு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.