ECONOMY

தப்பியோடிய 72 ரோஹிங்கியர்களை தேடுவது தொடர்கிறது – போலீஸ்

24 ஏப்ரல் 2022, 4:36 PM
தப்பியோடிய 72 ரோஹிங்கியர்களை தேடுவது  தொடர்கிறது – போலீஸ்

அலோர்ஸ்டார், ஏப்ரல் 24 - புதன்கிழமை (ஏப்ரல் 20) பண்டார் பாருவுக்கு அருகிலுள்ள சுங்கை பகாப் குடிநுழைவு தடுப்புக் கிடங்கில் இருந்து தப்பிச் சென்ற மீதமுள்ள 72 ரோஹிங்கியாகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

நேற்றும் இன்றும் எட்டு கைதிகள் மீட்கப்பட்டதாக கெடா காவல்துறை தலைவர் வான் அசான் வான் அகமது கூறினார், அதே நேரத்தில் தப்பியோடிய எஞ்சியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

"இன்று மாலை நிலவரப்படி, மேலும் 72 கைதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புதன்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில், 528 ரோஹிங்கியா கைதிகள் தடுப்புக் காவலில் இருந்து வெளியேறினர். எவ்வாறாயினும், அதிவேக நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முற்பட்ட போது வாகனம் மோதியதில் அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.