ALAM SEKITAR & CUACA

ஹரி ராயா பெருநாளுக்கு சிலாங்கூர் ஃபுரூட் வெலி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது

24 ஏப்ரல் 2022, 11:45 AM
ஹரி ராயா பெருநாளுக்கு சிலாங்கூர் ஃபுரூட் வெலி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 24: சிலாங்கூர் ஃபுரூட் வெலி    (SFV) ஏப்ரல் 30 முதல் ஹரி ராயா பெருநாளுக்காக ஒரு வாரம் மூடப்படும். வேளாண் சுற்றுலா மையம் மே 7 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்தது.

“சிலாங்கூர் ஃபுரூட் வெலி வேளாண் சுற்றுலாவின் முழுப் பகுதியும் செயல்பாடுகளும் ஏப்ரல் 30 (சனிக்கிழமை) முதல் மே 6 (வெள்ளிக்கிழமை) வரை ஹரி ராயா பெருநாளுக்கு தற்காலிகமாக மூடப்படும்.

" சிலாங்கூர் ஃபுரூட் வெலி  மே 7 (சனிக்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும்," என்று அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 016-6880792 / 012-3432971 / 012-3445033 அல்லது selangorfruitsvalley@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அழைக்கலாம்

சிலாங்கூர் ஃபுரூட் வெலி  கிட்டத்தட்ட 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பிளிம்பிங், டுரியான், மாம்பழம், கொய்யா, பலாப்பழம், திராட்சை உட்பட 20 வகையான பழங்கள் உள்ளன.

சிலாங்கூர் ஃபுரூட் வெலியில் 3,000 க்கும் மேற்பட்ட கெலுலுட் கூடுகள் உள்ளன, இது தீபகற்ப மலேசியாவில் கெலுலுட் தேனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.