ECONOMY

13 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

14 ஏப்ரல் 2022, 9:45 AM
13 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 14: நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட 1,374,520 சிறார்கள் அல்லது 38.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 615 சிறார்கள் அல்லது 6.5 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் மொத்தம் 28 லட்சத்து 65 ஆயிரத்து 407 பேர் அல்லது 92.1 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 67 ஆயிரத்து 575 பேர் அல்லது 95.4 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 859 பேர் அல்லது 67.8 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 59 ஆயிரத்து 339 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர், கூடுதலாக 2 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 86 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 47,622 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இதில் 5,599 முதல் டோஸ்கள், 34,384 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 7,639 பூஸ்டர் டோஸ்கள். தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 93 லட்சத்து 70 ஆயிரத்து 702 ஆகக் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று கோவிட்-19 காரணமாக மொத்தம் 22 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.