ECONOMY

சூப்பர் லீக் போட்டி- தோல்வியே தழுவாத கெடாவின் சாதனையை சிலாங்கூர் தகர்த்தது

11 ஏப்ரல் 2022, 7:00 AM
சூப்பர் லீக் போட்டி- தோல்வியே தழுவாத கெடாவின் சாதனையை சிலாங்கூர் தகர்த்தது

கோலாலம்பூர், ஏப் 11- சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் முதல் இரு ஆட்டங்களில் சமநிலை கண்டு வந்த சிலாங்கூர் எப்.சி. குழு, நேற்றிரவு பெட்டாலிங் ஜெயா, எம்.பி.பி.ஜே. அரங்கில் கெடா டாருள் அமான் குழுவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் வழி கடந்தாண்டின் சூப்பர் லீக்கின் இரண்டாம் நிலை வெற்றியாளரான சிலாங்கூர் எப்.சி. குழு மூன்று ஆட்டங்களின் வழி ஐந்து புள்ளிகளைப் பெற்று எட்டாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டியில் இரு குழுக்களும் மிக கவனமாக ஆட்டத்தைத் தொடக்கின. எனினும் எட்டே நிமிட இடைவெளியில் சிலாங்கூர் இரு கோல்களைப் புகுத்தி கெடா குழுவை நிலைகுலையச் செய்தது. இவ்விரு கோல்களையும் முகமது முக்காய்ரி  அஜ்மால் மாஹாடி 26 வது நிமிடத்திலும் ஹெர்லிசன் கெய்ன் டி சௌசா பெரேய்ரா 34 வது  நிமிடத்திலும் புகுத்தினர்.

இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றியைக் பெற்றிருந்த கெடா அணி சளைக்காது சிலாங்கூரின் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து ஆடி வந்தது. ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் முகமது நோர் ஹக்கிம் மேலும் ஒரு கோலை அடித்து கோல் எண்ணிக்கையை 3-0 ஆக்கினார்.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் சிலாங்கூர் தனது நான்காவது கோலை அடித்த வேளையில்  கெடா தனது ஒரே கோலை ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் போது முகமது பயாத் முகமது ஜூல்கிப்ளி மூலம் புகுத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.