MEDIA STATEMENT

டத்தோஸ்ரீ அன்வாருக்கு கோவிட்-19: ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்

22 மார்ச் 2022, 3:14 AM
டத்தோஸ்ரீ அன்வாருக்கு கோவிட்-19: ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்

கோலாலம்பூர், மார்ச் 22-   நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி -பி.சி.ஆர். சோதனையில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் தனிச் செயலாளர் சுக்ரி சஹாட் நேற்று இதனை உறுதிப்படுத்தினார். சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விதிகளின்படி அன்வார் ஏழு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக் கொள்வார் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு ஏதுவாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணியாளர்களும் ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.ஒ.பி. விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.