ECONOMY

ரமலான் மாதத்தில் போதுமான அளவு அத்தியாவசிய பொருள் கையிருப்பு- சிலாங்கூர் உத்தரவாதம்

21 மார்ச் 2022, 3:09 AM
ரமலான் மாதத்தில் போதுமான அளவு அத்தியாவசிய பொருள் கையிருப்பு- சிலாங்கூர் உத்தரவாதம்

ஷா ஆலம், மார்ச் 21- புனித ரமலான் மாதத்தின் போது அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு பற்றாக்குறை தொடர்பில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு இதுவரை எந்தப் புகாரையும் பெறவில்லை என்று பயனீட்டாளர் மற்றும் ஹலால் உதவுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

நாங்கள் பொருள்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து வருவோம். பொருள்களின் விலையை விருப்பம் போல் உயர்த்தும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று, ஐ-சிட்டி சென்ட்ரல் பேரங்காடியில் சிலாங்கூர் பயனீட்டாளர் விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

பொருள்களின் விலையை சரிபார்க்க 'ப்ரைஸ் கேட்ச்சர்' (Price Catcher) எனும் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி பொது மக்களை  அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூரில் தவறிழைக்கும் வணிகர்கள் தொடர்பில்  கீழ்க்கண்ட வழிகளில் புகார் செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.

• WhatsApp 019-279 4317

• Portal e-aduan.kpdnhep.gov.my

• Call Centre 1-800-886-800

• Emel e-aduan@kpdnhep.gov.my

• Ez ADU KPDNHEP

• Bilik Gerakan KPDNHEP Selangor 03-5514 4393/ 5518 1810/ 5512 5485

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.