ALAM SEKITAR & CUACA

தாமான் புக்கிட் பெர்மாய் நிலச்சரிவு- மகேந்திரா, ராமசாமி உள்பட நாலவர் பலி

11 மார்ச் 2022, 10:44 AM
தாமான் புக்கிட் பெர்மாய் நிலச்சரிவு- மகேந்திரா, ராமசாமி உள்பட நாலவர் பலி

கோலாலம்பூர், மார்ச் 11 -  அம்பாங்கில் உள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 2 குடியிருப்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நால்வர் மற்றும் காயமடைந்த ஒருவரின் பெயர்களைப் போலீசார் இன்று வெளியிட்டனர்.

ஏ.மகேந்திரா(வயது 36), இ. ராமசாமி (வயது 58), முகமது சைபுல்லா ரிட்சுவான் இஷாக் (வயது34) மற்றும் சோங் சியூ கிம் (வயது85) ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.  செங் கிம் செங் (வயது 85) என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இறந்த அனைவரின் உடல்களும் அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாருக் எஷாக் கூறினார்.

"காயமடைந்த நபர் தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் இங்குச் செய்தியாளர்களிடம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.