ECONOMY

இளையோரில் 91 விழுக்காடு முழு தடுப்பூசியையும் சிறார்களில் 29.3 விழுக்காடும் முதல் டோஸைப் பெற்றனர்

8 மார்ச் 2022, 12:53 PM
இளையோரில் 91 விழுக்காடு முழு தடுப்பூசியையும் சிறார்களில் 29.3 விழுக்காடும் முதல் டோஸைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 8: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதுடையோரில் நேற்று மொத்தம் 1,041,733 பேர் அல்லது 29.3 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரத்து 528 பேர் அல்லது 64 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் மற்றும் மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 999 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை  முழுமையாகப் பெற்றுள்ளனர்,  அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 772 பேர் அல்லது 98.772 விழுக்காட்டினர் குறைந்தது  ஒரு  டோஸ்  தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 32 ஆயிரத்து 44 பேர் அல்லது 91 விழுக்காட்டினர்  தடுப்பூசியை  முழுமையாகப் பெற்றுள்ளனர்,  அதே நேரத்தில்  29 லட்சத்து 32 ஆயிரத்து 526 பேர் அல்லது 94.2 விழுக்காட்டினர் குறைந்தது  ஒரு  டோஸ்  தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்.

15,935 முதல் டோஸ்கள், 1,766 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 46,038 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 63,739 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசியின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்து 97 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 77 இறப்புகள் பதிவாகியுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.